
சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்
மீண்டும் யாஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது. இழுவைப் படகுகளின் உதவியுடன் ஐந்து மணி நேர முயற்சிக்குப் பிறகு, சரக்குக் கப்பல்கள் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியதாகவும், கால்வாய் வழியாகப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாகவும் எகிப்திய அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். உக்ரைனில் இருந்து 65,000 டன் சோளத்துடன் சீனாவுக்கு புறப்பட்ட மார்ஷல் தீவின் எம்வி குளோரி கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கால்வாயில் சிக்கியது. இதைத்தொடர்ந்து நான்கு இழுவைப் படகுகளின் உதவியுடன் கப்பல் மீண்டும் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒசாமா ரபி தெரிவித்தார். கால்வாயில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்மாலியா மாகாணத்தில் உள்ள குவாண்டரா நகருக்கு அருகே கப்பல் கரை ஒதுங்கியது. இந்த கப்பலை இழுத்துச் செல்லும் இழுவைப் படகுகளின் படங்களை கால்வாய் அதிகாரிகள் வெளியிட்டனர்.