ஸ்கூல் பஸ் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பச்சிளங் குழந்தை..!!

சித்ரதுர்கா மாவட்டம் ஓசதுர்கா தாலுகா ஸ்ரீராமபுரத்தை அடுத்த தொட்டயனபாளையத்தை சேர்ந்தவர் சுசீலாம்மா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்ரீராமபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 2வது மகன் புவன். பிறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. சுசீலாம்மா பொதுவாக மூத்த மகனை பள்ளி வேனில் அழைத்துச் செல்வார். இதேபோல் சம்பவத்தன்று சுசீலாம்மா தனது மூத்த மகனை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது புவனும் அவர்களை பின் தொடர்ந்தான். இதை சுசீலாம்மா கவனிக்கவில்லை. மூத்த மகனை வேனில் ஏற்றிவிட்டு, திரும்பும் போது புவனும் வேனில் ஏறினார். அப்போது புவன் கால் தவறி கீழே விழுந்தார்.

அப்போது, வேனில் ஏற்றிச் சென்றபோது, சக்கரத்தில் புவன் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த புவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு ஒசதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீராமபுரா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஸ்ரீராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒன்றரை வயது சிறுவன் தாய் கண்முன்னே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *