
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:-
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., தோ்ச்சி பெற்றவா்கள், பெறாதவா்கள், மேல்நிலைப்பள்ளிப் படிப்புத் தோ்ச்சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வந்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எனில், ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவா்கள் 31.12.2022 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினருக்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். உரிய சான்றுகளுடன் 28.02.2023-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.