
விமான பயணி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்!
கோவை சர்வதேச விமானநிலையத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 167 பயணிகளுடன் விமானம் வந்தது. இதில் வந்த சேலத்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவை வந்த விமான பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரேண்டம் முறையில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் பீளமேட்டை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும். அந்த பெண் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.