
விமான நிலையத்தில் பரபரப்பு… தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு பயணி..!!
பஹ்ரைனில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை டெல்லி வந்தது. அந்த பயணிகள் விமானத்தில் வந்த 29 வயது சீன பயணி ஒருவர் விமான நிலைய கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். சீனப் பெண் ஒருவர் சவரக் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த அதிகாரிகள் சீன பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீனப் பெண், தனக்கு வேலை பறிபோனதாலும், காதலன் பிரிந்ததாலும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.