
வனுவாட்டுவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியது
பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறிவிட்டனர். இதற்கிடையில், நியூ கலிடோனியா மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை இருந்தபோதிலும், அது ஒன்றரை மணிநேரத்தில் ரத்து செய்யப்பட்டது.