
மோகன்லால் நடிக்கும் எலோன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது
ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், ராஜேஷ் ஜெயராமன் எழுதி, ஆசிர்வாத் சினிமாஸ் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் திரைப்படம் எலோன். இப்படம் ஜனவரி 26, 2023 அன்று வெளியாகும். இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மோகன்லால் படத்தில் காளிதாஸ் என்ற ஒரே கேரக்டரில் நடிக்கிறார், அவருக்கு படத்தில் சில குரல் வேடங்களும் உள்ளன. இந்த படத்தின் பின்னணி இசையை 4 மியூசிக்ஸ் அமைத்துள்ளது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்திற்காக உழைக்கும் காளிதாஸாக மோகன்லால் இந்த படத்தில் வருகிறார்.
.