
மேற்கு வங்கத்தில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொழிற்சாலை ஊழியர்கள் தீயைக் கவனித்து அதை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ரத்கோலா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.