
முட்டை விலை அதிகரிப்பு
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2-ந் தேதி 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று மேலும் 10 காசு அதிகரித்துள்ளது முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலை ஆகும்.