
மத்திய செனகலில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பயணிகள் பலியாகினர்
மத்திய செனகலில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பயணிகள் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். அதிபர் மேக்கி சால் ஞாயிற்றுக்கிழமை விபத்து குறித்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கஃப்ரின் பிரதேசத்தின் கினிவி கிராமத்தில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை 1ல் சென்று கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த மற்றொரு பேருந்து மீது மோதியதே விபத்துக்குக் காரணம் என்று அரசு வழக்கறிஞர் செக் டியெங் கூறினார் .