போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக ரூ.7.22 கோடி அபராதம் வசூல்

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் சென்றதாக 7,736 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 15,634 வழக்குகள், சிக்னல் மீறியதாக 56,065 வழக்குகள், ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 4,87,338 வழக்குகள், சீட்பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 35,170 வழக்குகள், அதிக உயரத்திற்கு லோடு ஏற்றி சென்றதாக 7,676 வழக்குகள் என மாநகரில் மொத்தமாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்பாட் பைன் என்ற வகையில் ரூ.6.10 கோடி வசூலிக்கப்பட்டது. கடந்த 1 ஆண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைவான வழக்குப்பதிவு செய்தும் அபராதம் அதிகமாக பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *