
புலிகள் உயிரிழப்பு… மத்திய பிரதேசம் சிறப்பு அந்தஸ்தை இழக்க வாய்ப்பு..!!
மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில் புலிகள் அதிகம் உள்ள மத்திய பிரதேசத்தில் 34 புலிகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக 15 புலிகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்தன. ஒரு குறுகிய வித்தியாசத்தில், மத்தியப் பிரதேசம் நாட்டின் ‘புலி மாநிலம்’ என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் கர்நாடகாவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான புலிகள் இறந்ததால், மத்திய பிரதேசம் புலி மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. கர்நாடகா கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் பல புலிகள் இறந்தது மர்மம் என அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.