
பிரேசிலில் நடைபெற பயங்கர கலவரம்: முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் நடத்திய அடாவடித்தனம்
பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவை பதவி நீக்கம் செய்யக் கோரி பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது . இந்த மோதலின் பின்னணியில் முன்னாள் அதிபர் ஜெய் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் உள்ளனர். போல்சனாரோ ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து கிளர்ச்சியாளர்களை சமாளிக்க அரசு படைகளை அனுப்பியது. இது ஒரு பாசிச தாக்குதல் என்று ஜனாதிபதி லுலா ட சில்வா கூறினார். இந்த கலவரத்தையடுத்து பலர் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.