
பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தமிழக அரசு பால் கொள்முதலுக்கு மேலும் கூடுதல் விலை அறிவிக்க கோரி நடந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சண்முகம், பெருமாள், முனுசாமி முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.