
பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா..!!
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அரசு வழிகாட்டுதலின்படி வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுத்தபடி ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள், பார்வையாளர்கள் அமரும் கேலரி, இரு அடுக்கு பாதுகாப்பு வேலி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இதை முன்னிட்டு நேற்று காலை வாடிவாசல் எதிரில் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அதன்பின், வாடிவாசலுக்கு வர்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, இயந்திரங்கள் மூலம் வாடிவாசல் மைதானத்தை சுத்தம் செய்து சமன்படுத்தும் பணி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது.