
தெப்ப உற்சவவிழா… மதுரை மீனாட்சி கோவிலில் நடந்த முகூர்த்தகால் நடும் விழா
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து பிப்ரவரி 4ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி நேற்று மாரியம்மன் தெப்பக்குளத்தில் முகூர்த்தகால் நடும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.