
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு… இன்று ரூ.300-க்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு…!!!
திருப்பதியில் ஜனவரி 12 முதல் ஜனவரி 31 வரை ரூ.300க்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகளை www.tiruptipalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதிக்கு நேற்று 62,856 பேர் வருகை தந்துள்ளனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.