
சொந்த ஊர் செல்ல சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பியதால் பிற போக்குவரத்துக் கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டு விறுவிறுப்பாக புக்கிங் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், சேலம், மதுரை, கும்பகோணம், கோவை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கும் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளன. 13-ந்தேதி வெளியூர் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் நிரம்பி வருகின்றன. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 2 லட்சம் பேர் முன் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.