
சித்தராமையாவை திப்பு சுல்தானாக சித்தரித்து புத்தகத்தை வெளியிடும் பாஜக அமைச்சர்
பெங்களூரு: சித்தராமையா குறித்த புத்தகத்தை கர்நாடக பாஜக அமைச்சர் மாலை 3 மணிக்கு புத்தகத்தை பாஜக கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயணன் வெளியிடுகிறார். சித்தராமையா தனது ஆட்சியில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தவும், ஹலாலை கட்டாயமாக்கவும் தீர்மானித்ததாக புத்தகத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
திப்பு சுல்தான் வேடத்தில் சித்தராமையாவை சித்தரிக்கும் கார்ட்டூன் புத்தகத்தின் அட்டையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புத்தகத்தை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த புத்தகம் அவதூறானது என்றும், அதன் வெளியீட்டை நிறுத்தக் கோரியும் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளது.