
கோவையில் 43.78 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தலைைம தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று படிவம் வழங்கியும், இணையதளம் வழியாகவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 35 ஆயிரத்து 475 வாக்காளர்கள் (43.78 சதவீதம்) மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பதில் கிராமப்பகுதிகள் அடங்கிய தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைத்துள்ளனர். ஆனால் நகரப் பகுதிகள் அடங்கிய தொகுதிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிகபட்சமாக பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 62.84 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மிகவும் குறைவாக சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியில் 32.44 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.