
கோவிட் கொள்கைக்கு எதிரான விமர்சனம்; சீனாவில் ஏராளமான சமூக ஊடக அக்கவுண்ட்கள் முடக்கம்
சீனாவில், அதிபர் ஜி ஜின்பிங்கின் கோவிட்-19 கொள்கையை விமர்சித்ததற்காக சமூக ஊடக தளமான வெய்போவில் 1,120 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. Weibo என்பது Twitter போன்ற ஒரு சீன சமூக ஊடக தளமாகும். அந்நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மோதலுக்கு அழைப்பு விடுத்ததன் காரணமாக அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில அக்கவுண்ட்கள் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.