குட்டையில் தவறி விழுந்த வாலிபர் பலி
கோவை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் அருள்குமார் (வயது 33) என்பவரும் கோழிப்பண்ணை வைத்து உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்தது. நேற்று அருள்குமார் வழக்கம்போல் பண்ணைக்கு வேலைக்கு வந்தார். அங்கு விவசாய பணிகளை முடித்து விட்டு கை கழுவுவதற்காக சின்னஆறுவ செட்டியார் தோட்டத்தில் உள்ள பண்ணைக்குட்டைக்கு சென்றார். அப்போது எதிர்பாரா தவிதமாக நிலை தடுமாறி அவர் குட்டையில் தவறி விழுந்தார். நீரில் விழுந்த அவர் மூச்சுத்திணறி குட்டையிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி அருள்குமாரின் பிணத்தை மீட்டனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.