
கர்ப்பிணி பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார் : டெல்லியில் கொடூரம்
டெல்லி: டெல்லி பவானாவில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பலத்த தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கொலை செய்ய முயன்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.