
கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா..!!
மேலூர் பகுதியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா கரும்பு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பேரில், நாவினிப்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தமிழக அரசின் பொங்கல் கரும்பு கொள்முதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 6 அடி உயரமுள்ள கரும்புகளை மட்டும் கொள்முதல் செய்வதால், மீதமுள்ள கரும்புகள் வீணாகி நஷ்டம் ஏற்படுவதாகவும், செலவுகளை குறைத்து கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் செலுத்துவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவுடன் மேலூர் நிர்வாகி ரகு என்கிற விஜயராகவன் உடன் இருந்தார்.