
கடும் குளிர் காரணமாக 4 மாநிலங்களுக்கு ரெட் அலார்ட்
கடும் குளிர் மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக 4 மாநிலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பள்ளிகளுக்கு இம்மாதம் 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளிகளுக்கு இம்மாதம் 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் குளிர் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.