கடன் மோசடி வழக்கு… சந்தா கோச்சார், தீபக் கோச்சாரை விடுவித்த மும்பை நீதிமன்றம்…!!!

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் டிசம்பர் 24ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த மோசடி வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை காவலில் இருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்களை கைது செய்தது சட்டப்பூர்வமான நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே, 2022ல், இந்த மோசடி வழக்கில் சாந்தா கோச்சாரை அமலாக்க இயக்குனரகம் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தது. சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தார்.

பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியுள்ளார். கடன் தொகை பல்வேறு தவணைகளில் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடனை திருப்பி செலுத்தாத கடனாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, 2018 மே மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, 2018 அக்டோபரில் சந்தா கோச்சார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *