
கடத்த முயன்ற ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாமக்கல் வழியாக போதைப்பொருட்களை காரில் கடத்திச் செல்வதாக, நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காருக்குள் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான போதை பாக்குகள் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் நாமக்கல் நகர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போதை பாக்குகள் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரையும், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.