
உ.பி.யில் பரபரப்பு… 35 வயது நபர் அடித்து கொலை…!!!
உத்தரபிரதேச மாநிலம் கோபகஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கேதார் சிங்கின் 35 வயது பேரன் அடித்துக் கொல்லப்பட்டார். 1980ல் கோசி தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த கேதார் சிங்கின் பேரன் ஹிமான்ஷு சிங். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில் லைரோ டோன்வார் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு சென்றார். அங்கிருந்த ஒரு குழுவினருடன் ஹிமான்ஷு சிங் வாக்குவாதம் செய்தார். அந்த கும்பல் அவரை கட்டையால் தாக்கியது. சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஹிமான்ஷு சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.