
இந்திரஜித் மற்றும் நைலா உஷா நடிக்கும் ‘குஞ்சம்மினிஸ் ஹாஸ்பிடல் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
மலையாளத்தில் இந்திரஜித், நைலா உஷா நடிக்கும் லேட்டஸ்ட் படமான குஞ்சம்மினிஸ் ஹாஸ்பிடல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி வந்துள்ளது. ஃபேண்டஸி காமெடி படத்தில் தென்னிந்திய நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மூன்று நட்சத்திரங்கள் தவிர சரயு மோகன், பாபுராஜ் ஆகியோரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்படவுள்ளது. இந்த படத்தை சனல் வி தேவன் இயக்குகிறார். குஞ்சம்மினிஸ் ஹாஸ்பிடல் படத்தை வாவ் சினிமாஸ் பேனரில் சந்தோஷ் திரிவிக்ரமன் தயாரிக்கிறார். இப்படத்தில் மல்லிகா சுகுமாரன், பினு பப்பு, சாதனா, ஹரிஸ்ரீ அசோகன், பிரசாந்த் அலெக்ஸ், பிஜு சோபானம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.