ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 2 பேருக்கு தூக்குதண்டனை

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் இருவரை ஈரான் தூக்கிலிட்டது.இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முகமத் கராமி, சையத் முகத் ஆகிய இருவரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. ஈரானில் பாதுகாப்புப் படை வீரரை கொன்ற குற்றத்திற்காக இருவரும் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *