
வைடு கொடுக்காத அம்பயரிடம் ஷாகிப் அல்ஹசன் வாக்குவாதம்
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் லீக் தொடரில், வங்காளதேச தேசிய அணியின் கேப்டனாக இருக்கும் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது பந்துவீச்சாளர் பவுன்ஸ் ஒன்றை வீசினார். அது ஷகிப்பின் தலைக்கு மேலே சென்றது. அது வைடுதான் என நினைத்து ஷகிப் லெக் அம்பயரை பார்க்க, லெக் அம்பயரோ வைடு வழங்காததால், ஆத்திரமடைந்த அவர், லெக் அம்பயரை பார்த்து மூன்று முறை ஆக்ரோஷமாக கத்தினார்.
மேலும், நடுவரின் அருகில் சென்று வைடு ஏன் வழங்கவில்லை எனக்கூறி கடும் வாக்குவாதம் செய்தார். எனினும், நிதானத்துடன் பேசிய நடுவர், ஓவரின் முதல் பவுன்சர் என்பதால், வைடு வழங்கவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும், கோபம் தீராத ஷகிப், நடுவரின் முடிவில் திருப்தி இல்லாது கானப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.