
வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவு
வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. அணையில் 69 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை நின்றபோதும் தண்ணீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 52.56 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 667 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.