விமானம் மூலம் இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது!

கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது. இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *