
லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
தருமபுரி:
அரூர் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ்க்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் டி.எஸ்.பி தலைமையிலான சிறப்பு படையின் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக அரூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சண்முகம் என்பவரை காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன். ரூ.9100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.