
மெக்சிகோவில் ரயில் மோதியதில் ஒருவர் பரிதாப மரணம்
மெக்சிகோவில் ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் , மேலும் 52 பேர் காயமடைந்தனர். மெக்சிகோ நகரில் உள்ள மெட்ரோவில் சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில் சேவையைத் தொடங்கவிருந்ததாக நகர மேயர் கிளாடியா ஷெயின்பாம் ட்விட்டரில் தெரிவித்தார். நகரின் பாதுகாப்புத் தலைவர் ஒமர் கார்சியா உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது, அந்தப் பெண் இறந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.