முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றி : ரிஷப் பண்ட் குறித்து பிசிசிஐ தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் தனது காரில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்டிற்கு நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முழங்கால் தசைநார் கிழிந்த நிலையில் அதற்கான அறுவை சிகிச்சை நேற்று முன் தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக பிசிசிஐ நேற்று தெரிவித்தது. இதனையடுத்து ரிஷப் பண்ட் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.