
மியான்மர் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கைதி ஒருவர் மரணம்
மியான்மர் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்தனே நகர சிறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வியாழக்கிழமை இரவு கைதிகளில் ஒருவரிடம் இருந்து செல்போனை பாதுகாப்புப் பணியாளர்கள் கைப்பற்றி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை அடுத்து கலவரம் வெடித்தது. ஏறக்குறைய 70 கைதிகள் தங்களுடைய அறைகளை உடைத்து, சிறைக்குள் பரவலான சேதத்தை ஏற்படுத்தினர். ரப்பர், சிமெண்ட் கட்டைகள் மற்றும் கற்களால் பாதுகாப்பு படையினர் தாக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் தற்காப்பு முயற்சியின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.