
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு- போலீஸ் விசாரணை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 43). விவசாயி. சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தை குத்த கைக்கு எடுத்து மல்லிகைப்பூ சாகுபடி செய்து தோட்ட வேலைகளை கவனித்து வந்தார். இந்த தோட்டத்துக்கு அருகே பம்ப் செட் கிணறு ஒன்று உள்ளது. மேலும் அருகே டிரான்ஸ் பார்மர் உள்ளது. மேலும் பம்ப் செட்டில் மின் இணைப்பு பழுது ஏற்படும். அப்போது அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சுவிட்ஸ் ஆப் செய்து விட்டு சுந்தரராஜன் ஏறி சரி செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது பம்ப் செட்டில் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து வழக்கம் போல் சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்தார். இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரி லேயே தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சத்தியமங்க லம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.