
மாரத்தான் போட்டியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று நடைபெறும் மாரத்தான் போட்டியை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதியில்லை.
மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை, சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம் மாநகர் பேருந்துகள் மட்டும் பெசண்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.