
மத்திய அரசு சட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி..!!
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நாடு முழுவதும் நடந்து வருகிறார். தற்போது அரியானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நடந்து வருகிறது. ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறியதாவது:- பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டில் பரவியுள்ள அச்சம் மற்றும் வெறுப்புக்கு எதிராக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எரிபொருள் மற்றும் உரங்களின் விலை நேரடியாக அவர்களைப் பாதித்துள்ளது. மத்திய அரசு திரும்பப் பெற்ற விவசாயச் சட்டம் விவசாயிகளுக்கானது அல்ல. அவை விவசாயிகளுக்கு எதிரான ஆயுதமாக இருந்தன. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை சிறு வணிகர்களை நேரடியாக பாதித்துள்ளது’’ என்றார்.