
மது விற்ற 3 பேர் கைது
தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்டத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் சிறப்பு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரூர், காவல் உட்கோட்ட பகுதிகளில், கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த அருகே உள்ள கீரைப்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 59), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (32), எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாது (65) மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து, 128 மதுபாட்டில்கள், 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.