பிரட் உப்புமா

தேவையான பொருட்கள்
10 பிரட் ஸ்லைஸ்
½ கப் பச்சை பட்டாணி
1 உருளைக்கிழங்கு
1 கேரட்
5 to 6 பீன்ஸ்
1 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 பச்சை மிளகாய்
½ எலுமிச்சம் பழம்
1 துண்டு இஞ்சி
½ மேஜைக்கரண்டி கடுகு
½ மேஜைக்கரண்டி சீரகம்
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து ஒரு கிண்ணத்தில் வைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை பட்டாணியை போட்டு அது 95 சதவீதம் வேகும் வரை அதை வேக விடவும்.
பச்சை பட்டாணி 95 சதவீதம் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து பிரட்டுகளை எடுத்து அதை மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster ரின் மூலமாகவோ toast செய்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் கருவேப்பிலையை போட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
10 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு வேகும் வரை வேக விடவும். (தண்ணீரை கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக சேர்த்து விடக்கூடாது.)
தக்காளி நன்கு வெந்ததும் அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் toast செய்து நறுக்கி வைத்திருக்கும் பிரட்டு துண்டுகளை போட்டு அது நன்கு மசாலாவோடு சேருமாறு பக்குவமாக கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு பிரட் உப்புமாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *