
‘பாரத் ஜோடோ யாத்ரா’… கடுங்குளிரிலும் சாதாரண உடையில் ராகுல் காந்தி..!!!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடந்து வருகிறார். இதற்கிடையில், ஹரியானாவின் கர்னால் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் சட்டையின்றி தலையில் தலைப்பாகை அணிந்து நடனமாடினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது நிலவும் கடும் குளிரான சூழலில், குளிரைத் தாங்கும் உடைகளை அணியாமல் சாதாரண உடையில் ராகுல் காந்தி நடந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சட்டை அணிந்து நடனமாடியுள்ளனர். குளிரைத் தாங்கும் உடைகளை அணியாதது குறித்து முன்னதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மக்கள் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைக் குழந்தைகளிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை” என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.