
பனிமூட்டத்தால் 5 வட மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!
வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது