
பணம் மற்றும் நகையுடன் வாலிபர் மாயம்
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் துரைமணி (வயது 30). டிரைவர். இவரது சகோதரர் சபாரத்தினம் (32). இவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் துரைமணி வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை காணவில்லை. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். அவர் தனது தாய் வீட்டுக்கு சென்ற போது அவரது சகோதரரும் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவர் தன்னுடைய சகோதரர் சபாரத்தினம் தனது வீட்டு சாவியை எடுத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றுவிட்டார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சபாரத்தினம் எங்கு சென்றார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.