
நடிப்பு குறித்து மஞ்சு வாரியர் சொன்ன விஷயம் இதுதான்
மலையாள சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். வசீகரமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர் மஞ்சு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடிக்க தயாராகி வருகிறார். 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவ இவர் . அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்போது நடிகை தனது இரண்டாவது படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் மூலம் தமிழில் மீண்டும் வருகிறார். இப்படம் இம்மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது மஞ்சு வாரியர் பேசிய வார்த்தைகள் கவனம் பெற்று வருகிறது. மக்கள் தன்னை பார்த்து அலுத்துக்கொள்வதால் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்றும் அப்படி நடந்தால் படங்களில் நடன இயக்குனராக வருவேன் என்றும் மஞ்சு கூறியுள்ளார். துணிவு படத்தின் புரமோஷன் தொடர்பான பேட்டியில் மஞ்சு வாரியர் இதனை கூறியுள்ளார். மேலும் அவரைப் பற்றிய ட்ரோல்களை ரசிக்கிறார். நடிப்பில் தவறுகளை கண்டுபிடித்து திருத்தவும், தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கவும் ட்ரோல்கள் உதவியாக இருக்கும் என்றும் மஞ்சு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் மற்றவர்களை புண்படுத்தக்கூடாது என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார் .