
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : சர்வீசஸ் வீரர் நரேந்த சாம்பியன்
அரியானா மாநிலம் ஹிசார் நகரில் நடைபெற்று வந்த ஆண்களுக்கான 6-வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் சர்வீசஸ் வீரர் நரேந்தரை எதிர்த்து மோத இருந்த சாகர் காயம் காரணமாக விலகியதால் நரேந்தர் தங்கப்பதக்கத்தை பெற்றார். இதேபோல் சர்வீசஸ் வீரர்கள் பிஷ்வாமித்ரா சோங்தாம் (51 கிலோ பிரிவு), சச்சின் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ) ஆகியோரும் தங்கப்பதக்கத்தை வென்றனர்.