திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் மாயம்
சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ் வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ஆர்த்தி (வயது17). இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை. இவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆர்த்தியின் தாய் ரேவதி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.