
திருப்பதியில் விமர்சையாக நடந்த பிரணய கலக உற்சவம்…!!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடைபெறுகிறது. மலையபசுவாமியின் முதுகில் இருந்து தப்பிக்க ஸ்ரீதேவி, பூதேவி தாயார் மலர்களால் செய்யப்பட்ட உருண்டைகளை 3 முறை வீசி பாரம்பரிய உற்சவம் நடைபெற்றது. அன்னையர்களை சமாதானப்படுத்தி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி கோவிலை வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.