
‘திமிங்கல வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஆத்மீயா ராஜன்
மலையாளத்தில் ராகேஷ் கோபன் இயக்கத்தில் அனூப் மேனன் நடிக்கும் படம் திமிங்கலவேட்டை . இந்த படத்தில் ஆத்மீயா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். 2018ல் ஜோசப் படத்திலும் , ஜெயசூர்யாவின் ஜான் லூதர் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். உன்னிமுகுந்தனின் ‘ஷெஃபிக்கின்றே சந்தோசம்’ ஆத்மீயா ராஜன் நடிப்பில் வெளியான கடைசி படம். இதற்கிடையில் அனூப் மேனன் ‘திமிங்கல வேட்டை’ படத்தில் அட்வ.ஜெயராமனாக நடிக்கிறார். பைஜு சந்தோஷ், கலாபவன் ஷாஜோன், ரமேஷ் பிஷாரடி, ஜெகதீஷ், விஜயராகவன், மணியன்பிள்ளை ராஜு, கோட்டயம் ரமேஷ், நந்து, குன்ஹிகிருஷ்ணா மாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரதீப் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார். வி.எம்.ஆர் பிலிம்ஸ் பேனரின் கீழ் சாஜிமோன் தயாரித்துள்ளார்.